Australian Open Tennis Six-time champion won Jokovich failure

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆறு முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் தோல்வி அடைந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் உலகின் 14-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சும், 58-ஆம் நிலை வீரரான ஹியோன் சங்கும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஹியோன், 7-6(7/4), 7-5, 7-6(7/3) என்ற செட்களில் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தின்போது காயத்தில் ஏற்பட்ட வலியுடன் போராடிய ஜோகோவிச், தென் கொரியாவின் ஹியோன் சங்கிடம் வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறிய முதல் தென் கொரிய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த ஹியோன் சங், தற்போது காலிறுதிக்கு முன்னேறிய பெருமை தனதாக்கி உள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் தனது தொடக்க சுற்றில் நேர் செட்களில் ஹியோன் சங்கை வெளியேற்றியிருந்தார். அதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் ஹியோன் சங்.

ஹியோன் சங் தனது காலிறுதியில், அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்கிரெனை சந்திக்கிறார்.

முன்னதாக டென்னைஸ் தனது 4-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-2, 4-6, 7-6(7/4), 6-7(7/9), 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார்.