Australia Will be lucky at the last league

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் மழை பெய்து அந்த அணிக்குக் கடுமையான நெருக்கடி உண்டாக்கியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்திலாவது ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான ஆட்டம் இலண்டனில் நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ஓட்டங்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்கு சொருகியது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை பெய்தது.

இதில், வார்னர் 40 ஓட்டங்கள், ஸ்மித் 22 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். 

தொடர் மழையால் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

ஏற்கெனவே, நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியும் மழையால் தடைப்பட்டதால் இரு போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி கைவசம் இரு புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. 

கடைசி லீக் போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. அந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் ஆஸ்திரேலியா.

தோற்றுப் போனால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை.

வங்கதேசம் - நியூஸிலாந்து இடையேயான போட்டியில் வெற்றிப் பெறுகிற அணி இங்கிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.