Australia than India in the presence of 87 runs
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 276 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இழந்துள்ளதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது.
2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்கள் சேர்த்தது.
மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கியவுடன் சில ஓவர்கள் கழித்து ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 26 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்பிறகு 121-வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் வேட் (40), லயன் (0) ஆகியோரை வீழ்த்தினார்.
ஹேஸில்வுட் அடுத்தப் பந்தைச் சரியாக ஆடி ஜடேஜாவின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார். லயனின் விக்கெட் ஜடேஜாவின் 5-வது விக்கெட் ஆகும்.
இந்த இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் குறைவான ஓவர்கள் வீசிய ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பிறகு கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. ஹேஸில்வுட் 1 ஓட்டத்தில் வீழ்ந்தார்.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 276 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 87 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 63 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
அஸ்வின் 2 விக்கெட்டுகள், இஷாந்த், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
