ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா, மனு அட்ரி - சுமித் ரெட்டி இணை மற்றும் அர்ஜுன் - ராமச்சந்திரன் இணை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டங்களில் சாய் பிரணீத் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அகமது மெளலானாவை வென்றார். 

காலியிறுதியில் இந்தோனேசியாவின் லீ சிக்யுவை சந்திக்கிறார் பிரணீத்.

அதேபோன்று, சமீர் வர்மா 21-16, 21-12 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டகுமா எடாவை வென்றார். 

காலியிறுதியில் சீனாவின் லு குவாங்குவை சந்திக்கிறார் சமீர்வர்மா.

அதேபோன்று, இரட்டையர் பிரிவில் மனு அட்ரி - சுமித் ரெட்டி இணை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் கொரியாவின் யுக் யுன் சொய்யை வென்றனர்.

மற்றொரு இரட்டையர் பிரிவில் அர்ஜுன் - ராமச்சந்திரன் இணை 21-15, 25-23 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஒகமுரா - மகாயுகி நொடரோ இணையை வென்றது.