கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 45வது பிறந்தநாள். 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி சச்சின் டெண்டுல்கர் பிறந்தார். 16 வயதிலேயே இந்திய அணியில் சச்சின் இடம்பிடித்தார். அதன்பிறகு 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்தவர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன், அதிக சர்வதேச சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். கிரிக்கெட் வரலாற்றில், எந்தவொரு காலத்திலும் நிராகரிக்க முடியாத ஒரு வீரர் என்றால் அது சச்சின் தான்.

மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என்றெல்லாம் புகழப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், சச்சினின் பிறந்தநாளான இன்று, அவரை இழிவுபடுத்தும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. பதிலுக்கு சச்சின் ரசிகர்கள் வீடியோவை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.

சச்சின் பிறந்ததினமான இன்றுதான், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங்கின் பிறந்தநாளும் ஆகும். அதனால், சச்சினை பிளெமிங் போல்டு செய்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு பிளெமிங்கிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்திருந்தது.

Some @bowlologist gold from the man himself - happy birthday, Damien Fleming! pic.twitter.com/YcoYA8GNOD
— cricket.com.au (@CricketAus) April 24, 2018

இதைக் கண்டு கொதிப்படைந்த சச்சினின் ரசிகர்கள், பிளெமிங்கின் பவுலிங்கை சச்சின் வெளுத்தெடுத்த இதுபோன்ற பல வீடியோக்களை தங்களால் பதிவுசெய்ய முடியும் என கூறி பதிலடி கொடுத்துள்ளனர். பிளெமிங்கின் பவுலிங்கில் சச்சின் சிக்ஸர் அடித்த வீடியோ ஒன்றையும் டுவிட்டரில் பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர்.

I think you missed this master stroke from our own @sachin_rt against so called Swing King @bowlologist pic.twitter.com/pv5K3bVjIz
— Kalai Selvan🇮🇳 (@kalais036) April 24, 2018