Australia began the match

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது. 

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெளுத்து வாங்கி வெற்றி கண்டதன் மூலம் நம்பிக்கை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெறும் 3-ஆவது போட்டியில் வெல்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் படு தீவிரமாக உள்ளது.

2-ஆவது டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெறியோடு ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.

இந்திய அணியில் முகுந்துக்குப் பதிலாக விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.