Australia beat sri lanka in practice match...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வென்று பட்டையை கிளப்பியது ஆஸ்திரேலியா.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் இலங்கை – ஆஸ்திரேலியா இடையே இலண்டனில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இலங்கை அணியில் கேப்டன் மேத்தியூஸ் அதிகபட்சமாக 106 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 95 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் திக்வெல்லா 41 ஓட்டங்கள், உபுல் தரங்கா 13 ஓட்டங்கள், மெண்டிஸ் 5 ஓட்டங்கள், சண்டிமல் 17 ஓட்டங்கள், கபுகெடரா 30 ஓட்டங்கள், சீகுகே பிரசன்னா 31 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
குணரத்னே 70 ஓட்டங்கள், திசர பெரெரா 1 ஒட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் மொய்ஸஸ் ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச் அதிகபட்சமாக 109 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 137 ஓட்டங்கள் எடுத்தார்.
கேப்டன் வார்னர் 19 ஓட்டங்கள், கிறிஸ் லின் 19 ஓட்டங்கள், ஹென்ரிக்ஸ் 10 ஓட்டங்கள், மேத்யு வேட் 13 ஓட்டங்கள், ஸ்டாய்னிஸ் 15 ஓட்டங்கள், பட்டின்சன் 9 ஓட்டங்கள் எடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் 85 ஓட்டங்கள், பட் கம்மின்ஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் நுவன் பிரதீப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணியை, அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கொண்டது.
இதன்மூலம் பயிற்சி ஆட்டத்திலேயே பட்டையை கிளப்பி நாங்கள் நல்ல ஃபார்மில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது ஆஸ்திரேலியா.
