பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 92 ஓட்டஙகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 7, கேப்டன் ஸ்மித் 0, கிறிஸ் லின் 16, டிராவிஸ் ஹெட் 39, மிட்செல் மார்ஷ் 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, 16.2 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதையடுத்து மேக்ஸ்வெல்லுடன் இணைந்தார் மேத்யூ வேட். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 82 ஓட்டங்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா சரிவிலிருந்து மீண்டது. 56 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 7 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த ஜேம்ஸ் ஃபாக்னர் 5, பட் கம்மின்ஸ் 15, மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய மேத்யூ வேட், இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் சதமடித்தார். 100 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் குவித்த மேத்யூ வேட், ஒரு நாள் போட்டியில் அடித்த முதல் சதம் இதுதான்.
இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர், இமாத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 42.4 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆஸம் 33, இமாத் வாசிம் 29 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 4 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மேத்யூ வேட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST