ATP Finals Participate in the competition for the first time

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக பங்கேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல் முறையாக இந்த போட்டியில் கலந்து கொண்ட டிமிட்ரோவ் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை பங்கேற்பாளர் இப்போட்டியில் பட்டம் வெல்வது, 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது முதல் முறையாகும்.

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த டிமிட்ரோவ், இறுதிச்சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினுடன் மோதினார்.

இதில், 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவ் வென்றார்.

டிமிட்ரோவ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பட்டம் வென்றுள்ளார்.

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு விம்பிள்டன், இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியிருந்ததே அவரது அதிகபட்சமாக இருந்தது.

சாம்பியன் வென்ற வெற்றிக்குப் பிறகு பேசிய டிமிட்ரோவ் கூறியது:

"கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது எனது கனவுகளில் ஒன்றாகும். அதை தற்போது எட்டியதால் அளவற்ற மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. என்னால் இதைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

இந்த ஆண்டில் நான் சிறப்பாக செயல்பட்ட இடங்கள் எவை, நான் மேம்படுத்த வேண்டிய இடங்கள் எவை என்பது குறித்து எனது அணியினருடன் ஆலோசிக்க உள்ளேன்' என்று கூறினார்.