ATP Finals First American Jack Sack advanced to semi-finals after ten years ...

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்கர் என்று பெருமையை ஜேக் சாக் பெற்றுள்ளார்.

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜேக் சாக் மற்றும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர்.

இதில், 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜேக் சாக்.

இந்த வெற்றியின்மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்கர் என்ற பெருமையை ஜேக் சாக் பெற்றுள்ளார்.

முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு சீசனில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஜேக் சாக், "ஸ்வெரேவுக்கு எதிரான ஆட்டம் கடினமான ஒன்றாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.

மூன்றாவது செட்டில் முதலில் சாதாரணமாக ஆடினாலும், பிறகு ஆக்ரோஷமாக ஆடி ஆட்டத்தை கைப்பற்றினேன்" என்று அவர் தெரிவித்தார்.