ATP Finals Climax Continental - John Pearce Jodi Champion Won ...
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் - ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் இணை வாகைச் சூடியது.
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் - ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் இணை போலந்தின் லூகாஸ் குபோட் - பிரேசிலின் மார்செலோ மெலோ இணை எதிர்கொண்டன.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் ஹென்றி கான்டினென் - ஜான் பியர்ஸ் இண் ஐ 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லூகாஸ் குபோட் - மார்செலோ மெலோ இணையை வென்றது.
கான்டினென் - ஜான் பியர்ஸ் இணை இதுவரை நான்கு முறை லூகாஸ் - மார்செலோ இணையை சந்தித்துள்ளது.
அதில், மூன்று முறை கான்டினென் - ஜான் பியர்ஸ் இணை வெற்றிக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
