வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடும் உத்தேச அணியை நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். அதே அணிதான் மூன்றாவது போட்டியில் ஆடுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பவுலிங் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியதால் இரண்டு போட்டிகளிலுமே 300 ரன்களுக்கு மேல் குவித்தது. 

எனவே ஷமி நீக்கப்பட்டு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஜோடியான புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய இருவரும் எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆடுவதால், இந்த போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் என 5 பவுலர்கள் மற்றும் 6 பேட்ஸ்மேன்களுடன் இந்திய அணி களமிறங்கும் என ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில், உத்தேச அணியை தேர்வு செய்து செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த மேட்ச்ல நீங்க 2 பேரும் ஆடல.. பென்ச்ல இருங்க!! மூன்றாவது போட்டியில் ஆடும் உத்தேச இந்திய அணி

நாம் கூறியதை போலத்தான் கடந்த போட்டியில் ஆடிய உமேஷ் மற்றும் ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு புவனேஷ், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இணைந்துள்ளனர். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

மூன்றாவது போட்டியில் ஆடும் இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது