Asian Wrestling Championship Tournament Today Indian soldiers ready for ...

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்தப் போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கைர்ஜிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் முக்கிய வீராங்கனையாக சாக்ஷி மாலிக் கலந்து கொண்டு அசத்த இருக்கிறார். மேலும், வினேஷ் போகத், ரீது போகத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

ஆடவர் பிரிவில் ஒலிம்பிக் வீரர் சந்தீப் தோமர், பஜ்ரங் பூனியாவுடன், ஜிதேந்தர், சாக்ஷி மாலிக் கணவர் சத்யவர்த் கடியான் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் என ஒன்பது பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.