Asian Women Champions India enter into Final

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தென் கொரியாவின் டோங்கேசிட்டி நகரில் நடந்து வருகின்றன. 

இதில் இந்தியா ஏற்கெனவே ஜப்பானை 4-1, சீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

மூன்றாவது ஆட்டத்தில் மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. 

ஒன்பது புள்ளிகளுடன் தங்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா அடுத்து கொரியாவை நாளை சந்திக்கிறது. இறுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. 

இந்திய அணிக்கு குர்ஜித் கெளர், வந்தனா கட்டாரியா, லால்ரேமிசியாமி, ஆகியோரும், மலேசியாவுக்கு நுரைனி ரஷீத், ஹனிஸ் ஆகியோர் கோலடித்தனர்.