ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், ஆறு வெண்கலப் பதக்கங்களும் என மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை போட்டி பிலிப்பின்ஸின் பியூர்ட்டோ பிரின்செஸா நகரில் நடைபெற்றத்உ.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 80 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அல்மேட்டோ ஷோக்ருக்கும், இந்தியாவின் சடேந்தர் ராவத்தும் மோதினர்.

இதில், அல்மேட்டோ ஷோக்ருக், சடேந்தர் ராவத்தை வீழ்த்தினார்.

80 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் மற்றொரு இந்திய வீரரான மோஹித் கட்டானா, கஜகஸ்தானின் டோகம்பே சாஜின்டைக்கிடம் தோல்வி அடைந்தார்.

இந்திய வீரர்கள் இருவரும் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்ததால் இருவருக்கும் வெள்ளிப் பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன.

இந்திய வீரர்களான அங்கித் நர்வால் 57 கிலோ எடைப் பிரிவிலும், பவேஷ் கட்டிமணி 52 கிலோ எடைப் பிரிவிலும், சித்தார்த்தா மாலிக் 48 கிலோ எடைப் பிரிவிலும், வினித் தாஹியா 75 கிலோ எடைப் பிரிவிலும், அக்ஷய் சிவாச் 60 கிலோ எடைப் பிரிவிலும், அமான் ஷெர்வாத் 70 கிலோ எடைப் பிரிவிலும் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

ஆக மொத்தம் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், ஆறு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.