ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்தயத்தில், மகளிருக்கான 8 கி.மீ. போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீவனி ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்தய, சீனாவில் நடைபெறுகிறது. இதில், மகளிருக்கான 8 கி.மீ. போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீவனி ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதில், பந்தய இலக்கை அவர் 28.19 நிமிடங்களில் கடந்து 3-வது இடம் பிடித்தார். இப்​பிரிவில் சீனாவின் லி டான் 28. 3 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கமும், ஜப்பானின் அபே யுகாரி 28.6 நீமிடங்களில் வந்து வெள்ளியும் வென்றனர்.

இந்தப் பிரிவில் போட்டியிட்ட இதர இந்தியர்களான ஸ்வாதி கதாவே 30.18 நிமி​டத்தில் இலக்கை எட்டி 11-வது இடமும், ஜுமா காட்டுன் 32.14 நிமிடங்களில் இலக்கை எட்டி 140வது இட​மும் பிடித்தனர். மற்றொரு இந்தியரான லலிதா பாபர் 32.53 நிமிடங்கள் என்று கடைசியாக வந்​தார்.

மகளிருக்கான அணிகள் பிரிவில் போட்டியிட்ட இதே வீராங்கனைகள் அடங்​கிய இந்திய அணி, அதிலும் வெண்கலப் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.