Asian Cadet Judo Winning the 3 Medals including 2 Gold for India

ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன் போட்டியில் இந்தியா 2 தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன் போட்டி லெபனான் நாட்டில் நடைபெற்றது. இதில், இந்திய வீராங்னைகள் எஸ்.ரோஹிணி தேவி, தபபி தேவி ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், ஹரிஷ் வெண்கலப் பதக்கத்தையும் துவக்க நாளில் வென்றனர். 

லெபனானில் தற்போது நடந்து வரும் 12-வது ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன் போட்டிகள் மற்றும் 19-வது ஆசிய ஜூனியர் ஜூடோ சாம்பியன் போட்டிகளுக்கு 40 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோஹிணி 40 கிலோ எடைப்பிரிவிலும், மணிப்பூரின் தபபி தேவி 44 கிலோ எடைப்பிரிவிலும் தங்கம் வென்றனர். 

தபபி ஏற்கெனவே கடந்த 2017-ஆம் கிரிகிஸ்தானில் நடந்த ஆசிய கேடட் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, ஆடவர் 50 கிலோ பிரிவில் ஹரியாணாவின் ஹரிஷ் வெண்கலம் வென்றார்.