Asian Badminton Championship India quarter-final improvement Only Sindhu wins ...
ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மகளிரணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானுக்கு எதிரான மகளிர் ஒற்றையர் சுற்று ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அகானே யமாகுசியை வீழ்த்தினார்.
உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சிந்து, இத்துடன் யமாகுசியை 8 முறை சந்தித்துள்ள நிலையில் தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த ஆட்டம் 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 13-ஆம் நிலை வீராங்கனையான சயாகா சாடோ 21-12, 21-10 என்ற செட்களில் இந்தியாவின் ஸ்ரீ கிருஷ்ணப் பிரியா குதரவள்ளியை வீழ்த்தினார்.
மற்றொரு இந்தியரான அஸ்வினி பொன்னப்பாவை 14-21, 12-21 என்ற செட்களில் உலகின் 16-ஆம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரி வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்படே - பிரஜக்தா சாவந்த் இனை 17-21, 17-21 என்ற செட்களில் ஷிஹோ டனகா-கோஹாரு யோனேமோடோ இணையிடம் வீழ்ந்தது.
அதேபோல, அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடியும் 18-21, 18-21 என்ற செட்களில் மிசாகி மட்சுடோமோ-அயாகா டகாஹாஷி இணையிடம் வீழ்ந்தது.
