Asian Badminton Champion India Saina and sindhu progress to the next round ...
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, சிந்து ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளனர்.
அண்மையில் முடிவடைந்த காமன்வெல்த் போட்டி பாட்மிண்டனில் இந்திய அணியினர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தனர்.
இந்த நிலையில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி சீனாவின் உஹானில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா மற்றும் சிங்கப்பூரின் இயோ ஜியா மின் மோதினர்.
இதில், 21-12, 21-9 என்ற செட் கணக்கில் இயோ ஜியா மின்னை, சாய்னா வீழ்த்தினார். அடுத்த சுற்றில் சாய்னா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் காவ் பாஜியை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-19 என்ற செட் கணக்கில் தைபேவின் பையுபோவை வென்று 2-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் சிந்து சென் ஜியான்சியையும் எதிர்கொள்கின்றார்.
அதேபோன்றும் ஆடவர் பிரிவில் ஸ்ரீ காந்த் 13-21, 21-16, 21-16 என்ற கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வென்றார்.
ஆடவர் இரட்டையர் அர்ஜுன் - ராமச்சந்திரன் சிலோக், மகளிர் இரட்டையர் மேகனா - பூர்விஷா ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
