அஷ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவருக்கும் வரும் 29ம் தேதி தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

இங்கிலாந்து தொடர் முடிந்து ஆசிய கோப்பை தொடர் நடந்துவருகிறது. இதற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது.

வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இன்னும் இந்திய அணி தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து தொடரின்போது அஷ்வின் காயமடைந்தார். இங்கிலாந்து தொடருக்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து சிகிச்சை பெற்று பயிற்சி பெற்றுவந்தார். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக அவருக்கும் இஷாந்த் சர்மாவுக்கும் உடற்தகுதி தேர்வு வரும் அக்டோபர் 29ம் தேதி நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. 

29ம் தேதி உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அஷ்வின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான அணியில் சேர்க்கப்படுவார்.