Ashes Test Australia won by 10 wickets
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிப் பெற்றுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 83 ஓட்டங்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியாவின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 130.3 ஓவர்களில் 328 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்தின் தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 26 ஓட்டங்கள் பின்தங்கிய இங்கிலாந்து, 2-வது இன்னிங்ஸில் 71.4 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 51 ஒட்டங்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹேஸில்வுட், நாதன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 170 ஓட்டங்கள் இலக்குடன் நேற்று ஆடிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 50 ஓவர்களில் 173 ஓட்டங்கள் எடுத்து முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்தது.
அதிகபட்சமாக பேன்கிராஃப்ட் 82 ஓட்டங்கள், டேவிட் வார்னர் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய சந்தோசத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வீரநடைப் போட்டனர்.
