Ashes Test Australia in 662 The last game for England today ...
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 662 ஓட்டங்களில் டிக்ளேர் செய்தது. இன்று தனது கடைசி ஆட்டத்தை ஆட இருக்கிறது இன்ங்கிலாந்து.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் ஆட்டத்தில் டாஸ் வென்று, முதலில் பேட் செய்த இங்கிலாந்து 115.1 ஓவர்களில் 403 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிகபட்சமாக 140 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, சனிக்கிழமை முடிவில் 152 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 549 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தை ஸ்மித் 229 ஓட்டங்கள், மிட்செல் மார்ஷ் 181 ஓட்டங்களுடன் தொடங்கினர். இதில் மார்ஷ் அதே ஓட்டங்களில் ஆட்டமிழக்க, உடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 399 பந்துகளுக்கு 30 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 239 ஓட்டங்களுக்கு வீழ்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 301 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் வந்தவர்களில் மிட்செல் ஸ்டார்க் 1 ஓட்டம், பட் கம்மின்ஸ் 41 ஓட்டங்கள், நாதன் லயன் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அப்போது டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.
ஆஸ்திரேலியா அணி 179.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 662 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிம் பெய்ன் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 259 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ûஸ தொடங்கிய இங்கிலாந்து, நேற்றைய முடிவில் 38.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டேவிட் மலான் 28 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோவ் 14 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர். முன்னதாக களம் கண்ட அலாஸ்டர் குக் 14 ஓட்டங்கள், ஸ்டோன்மேன் 3 ஓட்டங்கள், ஜேம்ஸ் வின்ஸ் 55 ஓட்டங்கள், ஜோ ரூட் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 2 ஓட்டங்கள், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
கடைசி நாளான இன்று, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இங்கிலாந்து 127 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். தனது கைவசம் ஆறு விக்கெட்டுகளை வைத்துள்ளதால் அந்த அனி நிதானித்து ஆடினால் எளிதாக அந்த ஸ்கோரை எட்டிவிட முடியும் என்பதில் ஐயமில்லை.
