Arindar Chanthu defeat the Australian player and enter into semifinals

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அரிந்தர் சாந்து தனது அசத்தலான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் அரிந்தர் சாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் ரைஸ் டெளலிங் மோதினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் அசத்தலாக ஆடி 11-4, 11-8, 11-5 என்ற நேர் செட்களில் ரைஸ் டெளலிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் அரிந்தர் சாந்து.

அரிந்தர் சாந்து தனது அரையிறுதியில் நெதர்லாந்தின் பீட்ரோ ஸ்வீர்ட்மானுடன் மோதுகிறார்.