anderson slams india england test series schedule
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பட்டியலிடப்பட்ட விதத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. ஜூலை 3ம் தேதி தொடங்கி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் ஆகியவை ஜூலை 17ம் தேதி நிறைவடைகின்றன.

பின்னர் ஆகஸ்ட் முதல் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி 5 போட்டிகளும் முடிவடைகின்றன. 6 வாரத்தில் 5 போட்டிகளும் நடத்தி முடிக்கப்படுகின்றன.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால், இங்கிலாந்து அணியின் நட்சத்திர பவுலர் ஆண்டர்சனுக்கு 6 வார காலம் அந்த அணி நிர்வாகம் ஓய்வளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக உடல்நலம் தேறுவதற்காக அவருக்கு இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய ஆண்டர்சன், போட்டி அட்டவணை தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக பேசிய ஆண்டர்சன், 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகளை பட்டியலிட்டிருப்பது கேலிக்குரியது. இதனால் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படும். இந்த பட்டியல் அமைத்தவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். இது, இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலானதாகவே இருக்கும் என ஆண்டர்சன் தெரிவித்தார்.
