American Open tennis advanced players in the next round

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் கரீனோ பஸ்டா அரையிறுதிக்கு அசத்தலாக முன்னேறினார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைப்பெற்று வருகிறது.

இதில், மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸும், போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் வீனஸ் 6-3, 3-6, 7-6 (2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

வீனஸ் தனது அரையிறுதியில் சகநாட்டவரான ஸ்லோனே ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கரீனோ பஸ்டா மற்றும் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை மோதினார்.

இதில், 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தினார் கரீனோ.

அரையிறுதியில் கரீனோ பஸ்டா, தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.