all time best catches in this ipl season

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. பஞ்சாப் அணியின் நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக உள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறிதான். எஞ்சிய இரண்டு இடங்களுக்கு மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனின் விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த சீசனின் மிகச்சிறந்த 5 கேட்ச்களை பார்ப்போம்..

1. டிவில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

<iframe src='https://players.brightcove.net/3588749423001/H1Xzd8U6g_default/index.html?videoId=5786188237001&autoplay=1' allowfullscreen frameborder=0></iframe>

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த பந்து பவுண்டரி லைனை தாண்டி காற்றில் இருந்தது. அநாயசமாக குதித்து அந்த பந்தை கேட்ச் செய்தார் டிவில்லியர்ஸ். இந்த ஐபிஎல் சீசனின் மிகச்சிறந்த கேட்ச் இது என்று கூறலாம். பெங்களூரு சின்னசாமி மைதானமே மிரண்டு போனது.

2. டிரெண்ட் போல்ட் (டெல்லி டேர்டெவில்ஸ்)

<iframe src='https://players.brightcove.net/3588749423001/H1Xzd8U6g_default/index.html?videoId=5774445061001' allowfullscreen frameborder=0></iframe>

பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் கோலி அடித்த பந்தை டிரெண்ட் போல்ட் பவுண்டரி லைனில் கேட்ச் செய்தார். கேட்ச் பிடித்து பவுண்டரி லைனை ஒட்டி கீழே விழுந்த போல்ட், பவுண்டரி கோட்டை தொட்டுவிடாதவாறு உடலின் வேகத்தை கட்டுப்படுத்தினார். இதுவும் சிறந்த கேட்ச்.

3. மனீஷ் பாண்டே (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

<iframe src='https://players.brightcove.net/3588749423001/H1Xzd8U6g_default/index.html?videoId=5770434118001' allowfullscreen frameborder=0></iframe>

கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரசலின் கேட்ச்சை மனீஷ் பாண்டே பிடித்ததும் இந்த சீசனின் சிறந்த கேட்ச்களில் ஒன்று. பந்தை தவறவிட்ட மனீஷ், உடனே சுதாரித்து மீண்டும் பந்தை பிடித்துவிடுவார்.

4. ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)

<iframe src='https://players.brightcove.net/3588749423001/H1Xzd8U6g_default/index.html?videoId=5770377420001' allowfullscreen frameborder=0></iframe>

டெல்லி அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தூக்கி அடித்த பந்தை லாங் ஆன் திசையில் இருந்து ஓடி வந்து காற்றில் பறந்து ஹர்திக் பாண்டியா பிடித்தார். அந்த கேட்ச்சும் இந்த சீசனில் பலரது மனதை கவர்ந்த கேட்ச்களில் ஒன்று. கடினமான கேட்ச்சும் கூட.

5. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

<iframe src='https://players.brightcove.net/3588749423001/H1Xzd8U6g_default/index.html?videoId=5778162939001' allowfullscreen frameborder=0></iframe>

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தூக்கி அடித்த பந்தை லாங் ஆஃப் திசையில் இருந்து ஓடிவந்து விராட் கோலி பிடித்த கேட்ச்சும் இந்த சீசனின் நல்ல கேட்ச்களில் ஒன்று.