All this is not the achievement - honestly agreed Aaron Pinch ...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏழு அணிகளுக்காக விளையாடியதை எல்லாம் சாதனையாக ஏற்று கொள்ள மாட்டேன் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் (31) இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இது அவர் விளையாடும் 7-வது ஐ.பி.எல். அணியாகும். 

இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் 7 அணிகளுக்காக கால்பதித்த முதல் வீரர் என்ற சிறப்பை பிஞ்ச் பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆரோன் பிஞ்ச், "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த சாதனை எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டேன். அந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினேன். 

இதேபோன்று தான் 2013-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக மாற்று வீரராக இடம் பிடித்து கேப்டனாகவும் செயல்பட்டேன். 

எனவே, இந்த இரண்டையும் எண்ணிக்கையில் சேர்க்காமல் விட்டு விடுங்களேன். அதனால் 7 அணிகளில் விளையாடியிருக்கிறேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் கூறினார்.