All the teams that have won the All India Basketball Tournament are ...

தேனியில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் கிழக்கு ரயில்வே, பட்டிவீரன்பட்டி மற்றும் போபால் இஎம்இ அணிகள் வெற்றி பெற்று அசத்தின.

தேனி மாவட்டம், பெரியகுளம் சில்வர் ஜூபிளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.டி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்காக பிஎஸ் துரைராம சிதம்பரம் நினைவு அரங்கத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகள் நேற்று முன்தினம் (மே 15) தொடங்கின. இரண்டாம் நாளான நேற்று காலையில் கோரக்பூர் வடகிழக்கு ரயில்வே மற்றும் பெரியகுளம், சில்வர் ஜூப்ளி அணிகள் மோதின. இதில் வடகிழக்கு ரயில்வே அணி 66-45 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல பட்டிவீரன்பட்டி பிபிசி மற்றும் திருச்செங்கோடு பிஆர்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில், பட்டிவீரன்பட்டி அணி 70-65 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில், போபால் இஎம்இ அணி மற்றும் திண்டுக்கல் பிபிசி அணிகள் மோதின. இதில், 59-43 என்ற புள்ளிக் கணக்கில் போபால் இஎம்இ அணி வென்றது.