All Indian hockey tournaments for the Lakshmiyamal Memorial Circus today are starting. Where?
பத்தாவது ஆண்டு இலட்சுமியம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று கோவில்பட்டியில் தொடங்குகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.ஆர். மருத்துவ அறக்கட்டளை, இலட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடெமி ஆகியவை இணைந்து 10-வது ஆண்டு இலட்சுமியம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டிகளை நடத்துகின்றன.
இந்தப் போட்டிகள் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இன்று (மே 17) இரவு 7 மணிக்கு தொடங்குகின்றன. இதன் தொடக்க விழாவுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமை வகிக்கிறார்.
தமிழக இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைக்கிறார்.
கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
11 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், பின்னர் நாக்-அவுட் முறையிலும் போட்டி நடைபெறும்.
தொடக்க நாளன்று நடைபெறும் போட்டியில் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணியும், புதுதில்லி இந்தியன் போஸ்டல் அணியும் மோதுகின்றன.
தினமும் காலை 6 மணி, மாலை 5 மணி, 6.30 மணி, இரவு 8 மணிக்கு என 4 போட்டிகள் நடைபெறும்.
போட்டி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் சண்முகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), கண்ணப்பன் (கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (இலட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மணிசேகர், ராஜாமணி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
