All India basketball championships for Telangana and Trivandrum wins
அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் நாக் ஔட் சுற்றுகளில் தெலுங்கானா மற்றும் திருவனந்தபுரம் அணிகள் வெற்றி பெற்றன.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 59-வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள், கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான நேற்று சென்னை விளையாட்டு விடுதி அணியும், தெலுங்கானா மாநில அணியும் மோதின.
இதில் தெலுங்கானா அணி 96-92 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
அதேபோல, மற்றொரு போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணியும், திருவனந்தபுரம் மின்வாரிய அணியும் மோதின.
இதில் திருவனந்தபுரம் அணி 71-36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று காலையில் நடைபெற்ற போட்டியினை பிபா ஆணையர் வி.பி.தனபால் மற்றும் தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் து.சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை சில்வார்ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
