Alexander the champion of men Elena champion at the women wins the first time champion ...
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று நடைபெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார்.
இதில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை, அலெக்சாண்டர் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் அலெக்சாண்டர்.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார் அலெக்சாண்டர்.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, தன்னுடன் மோதிய ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் வென்றார்.
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய எலினா, அதை சரியாகப் பயன்படுத்தி சாம்பியன் ஆகியுள்ளார்.
இந்த சீசனில் 4-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ள எலினா, 31 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
