Asianet News TamilAsianet News Tamil

அதுக்காகலாம் தோனியை அணியில் வைத்திருக்க முடியாது!! தூக்குனது சரிதான்.. தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்

டி20 அணியிலிருந்து தோனியை நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

agarkar welcomes the decision of dropping dhoni from t20 team
Author
India, First Published Oct 29, 2018, 10:09 AM IST

டி20 அணியிலிருந்து தோனியை நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மோசமான ஃபார்மில் இருக்கும் சீனியர் வீரர் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

தோனி அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஒரு போட்டியில் கூட சோபிக்கவில்லை. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய தோனி, அதன்பிறகு இங்கிலாந்து தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என எதிலுமே சரியாக ஆடவில்லை. தோனி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை வரை தான் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

agarkar welcomes the decision of dropping dhoni from t20 team

எனவே 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் அவர் ஆடுவதற்கான வாய்ப்பே கிடையாது என்பதுதான் உண்மை. எனவே அவரது இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 2020 டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே ஒரு வீரரை உருவாக்க வேண்டும். அதனால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

agarkar welcomes the decision of dropping dhoni from t20 team

தோனி நீக்கப்பட்டதால், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித் அகார்கர், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து சில நல்ல முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 2020 டி20 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் விதமாக தோனி நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்டிற்கு அதிகமான போட்டிகளில் ஆட வாய்ப்புகளை வழங்கி அவரை மெருகேற்ற வேண்டும். ஒரு வீரரை அவரது தற்போதைய ஆட்டத்தை வைத்து மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, ரசிகர்கள் மத்தியில் இருக்கும் புகழ் மற்றும் கிரிக்கெட் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கக்கூடாது. 

agarkar welcomes the decision of dropping dhoni from t20 team

2020 டி20 உலக கோப்பை வரை ஆடுவாரா என்று கூட தெரியாத தோனியை அணியிலிருந்து நீக்கியது, அணியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த நிர்வாகம் எடுத்த முடிவு என்பதால் அது ஏற்புடையதுதான். தோனி கேப்டனாக இருக்கும் போது, பல வீரர்களை அறிமுகப்படுத்தினார், முன்னேற்றினார். அதுபோல் இப்போது செய்ய வேண்டும் என்று அகார்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios