பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது.
பாகிஸ்தான் - ஈரான் அணிகள் இடையிலான ஆசிய - ஓசியானியா குரூப் 2 போட்டி வரும் நாளைத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இஸ்லாமாபாதில் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன செயலர் காலித் ரெஹ்மானி கூறுகையில், "பாகிஸ்தானில் கடந்த 12 ஆண்டுகளாக டேவிஸ் கோப்பை போட்டியோ, வேறு சர்வதேச டென்னிஸ் போட்டிகளோ நடத்தபடவில்லை. இதனால் பாகிஸ்தான் டென்னிஸ் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த நேரத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறுவது எங்களுக்கு மிக முக்கியமானதாகும். ஈரான் வீரர்களுக்கு பாகிஸ்தான் அரசு உயர் பாதுகாப்பு அளித்துள்ளது' என்றுத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு விளையாடுவதற்கு எந்த அணியும் முன்வரவில்லை. இந்த நிலையில் இப்போது ஈரான் அணி இங்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
