After the stunning success of the Audi FC Chennai United
சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் சென்னை எஃப்.சி., சென்னை யுனைடெட் அணிகள் அசத்தலாக ஆடி வெற்றி பெற்றன.
செயின்ட் ஜோசப் குழுமம் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற சீனியர் டிவிஷன் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் ரயில்வே வீரர் ரிஜு கோலடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆனால் பின்னர் அபாரமாக ஆடிய சென்னை எஃப்.சி அணியில் 34-ஆவது நிமிடத்தில் காமேஷ்வரனும், 56-ஆவது நிமிடத்தில் அங்குசனாவும் கோலடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது.
காமேஷ்வரன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு ஆட்டத்தில் சென்னை யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியைத் தோற்கடித்தது.
சென்னை யுனைடெட் தரப்பில் கவியரசன், அமோஸ், அஜித் குமார் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் தரப்பில் விட்டாலிஸ் கோலடித்தார்.
அஜித்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
