இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவது போல, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் துபாயில் நடந்துவருகிறது.

இந்த தொடரில் கராச்சி கிங்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர் காலண்டர்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி, முல்தான் சுல்தான்ஸ் ஆகிய 6 அணிகள் ஆடிவருகின்றன.

இதில், இஸ்லாமாபாத் அணிக்கு மிஸ்பா உல் ஹக் கேப்டனாக உள்ளார். பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அஃப்ரிடி இடம்பெற்றுள்ள கராச்சி அணியின் கேப்டனாக இயன் மோர்கன் செயல்பட்டு வருகிறார்.

இந்த தொடரில் இஸ்லமாபாத் மற்றும் கராச்சி அணிகள் மோதிய ஒரு லீக் போட்டியில், அஃப்ரிடியின் செயல், கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தவர் மிஸ்பா-உல்-ஹக். பல இக்கட்டான நேரங்களில் பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர். இஸ்லமாபாத்தின் கேப்டனாக செயல்பட்டு வரும் மிஸ்பாவின் விக்கெட்டை வீழ்த்திய அஃப்ரிடி, அவருக்கே உரிய பாணியில், ரசிகர்களை நோக்கி இரு கைகளை உயர்த்தி விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாட தொடங்கினார். பின்னர், வீழ்த்தியது மிஸ்பாவின் விக்கெட்டை என்பதை உணர்ந்து, அவரது திறமைக்கு மரியாதை அளித்து, கைகளை உயர்த்தி கொண்டாடாமல், கைகளை இறக்கிவிட்டார்.

OUT! 8.6 Shahid Afridi to Misbah-ul-Haq
Watch ball by ball highlights at https://t.co/oP4tJ0o7mP#IUvKK #HBLPSL #PSL2018 @_cricingif pic.twitter.com/FYBXNaGs3h
— PakistanSuperLeague (@thePSLt20) March 16, 2018

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த செயலால், அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே பாராட்டி வருகின்றனர்.