afghan president tweet to pm modi on rashid khan
ரஷீத் கானை விட்டுத்தரமாட்டோம் என ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி டுவீட் செய்துள்ளார். அதில், ரஷீத் கானை உங்கள் நாட்டுக்கு தரமாட்டோம் என இந்திய பிரதமர் மோடியிடம் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிவருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முழுவதுமே சிறப்பாக ஆடிவருகிறார். அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை அளித்து வருகிறார்.
அதிலும் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்து பேட்டிங்கில் மிரட்டிய ரஷீத், மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு கேட்ச்சுகள் ஒரு ரன் அவுட் என ஃபீல்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத் அணி என்று சொல்வதை விட ரஷீத் கான் என சொன்னால் மிகையாகாது.
ரஷீத் கானின் ஆட்டத்தை கண்ட, சச்சின் மற்றும் டிராவிட் ஆகிய ஜாம்பவான்கள், ரஷீத் கான் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில், தங்கள் நாட்டின் திறமையை பாராட்டி ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானியும் டுவீட் செய்துள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Afghans take absolute pride in our hero, Rashid Khan. I am also thankful to our Indian friends for giving our players a platform to show their skills. Rashid reminds us whats best about Afg. He remains an asset to the cricketing world. No we are not giving him away. <a href="https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a></p>— Ashraf Ghani (@ashrafghani) <a href="https://twitter.com/ashrafghani/status/1000091172184952832?ref_src=twsrc%5Etfw">May 25, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அந்த டுவீட்டில், ரஷீத் கானை நினைத்து ஆஃப்கானிஸ்தான் பெருமை கொள்கிறது. ஆஃப்கானிஸ்தானின் திறமைகளை வெளிப்படுத்த பிளாட்ஃபார்மை அமைத்து கொடுத்த இந்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சொத்து ரஷீத் கான். அவரை விட்டுத்தரமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.
ரஷீத் கானை உங்கள் நாட்டுக்கு தரமாட்டோம் என மோடியிடம் கிண்டலாக தெரிவித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி. இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
