Advanced players for quarterfinals in Madrid Masters tennis tournament
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், கெய் நிஷிகோரி, டேவிட் கோஃபின் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது,
இந்தப் போட்டியில் ஜப்பானின் நிஷிகோரி தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரருடன் மோதினார். இதில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார்.
நிஷிகோரி தனது காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சை சந்திக்கிறார்.
செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ் மோதிய ஆட்டத்தில் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஃபெலிஸியானோ லோபஸை தோற்கடித்தார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் மற்றும் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுடன் மோதி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரயோனிச்சை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ வான்ட்வேக்கை தோற்கடித்தார்.
சைமோனா தனது அரையிறுதியில் லத்வியாவின் அனாஸ்டாஸியாவை எதிர்கொள்கிறார்.
