ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிப் பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிரடி ஆட்டத்தால் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி, தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 173 ஓட்டங்ககள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் மோசஸ் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 56, மைக்கேல் கிளிங்கர் 43 ஓட்டங்ககள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் குலசேகரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் அதிரடியாக ஆடிய குணரத்னே 46 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்ககள் குவித்தார்.
இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்ககள் குவித்து வெற்றிப் பெற்றது.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் குணரத்னே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
