Acapulco Open tennis tournament progressed to kalirutti list
அகாபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்று வரும் அகாபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்தார்.
ஜோகோவிச் தனது காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.
நடால் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாலோ லோரென்ஸியைத் தோற்கடித்தார்.
காலிறுதியில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை எதிர்கொள்கிறார் நடால்.
குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான போர்னா கோரிச்சை தோற்கடித்தார்.
இதன்மூலம் காலிறுதிக்கும் முன்னேறியவர்கள் பட்டியலில் மரின் சிலிச் இடம் பெறுகிறார்.
