தமிழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புத் தலைவராக தேர்வு
கூடைப்பாந்தாட்ட லீக் போட்டிகளை நடத்தி இந்திய வீரர்கள் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர்களையும் இந்திய லீக் போட்டிகளில் விளையாட வைப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் தேர்தல்
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தேர்தல் டெல்லியில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்காக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டார். இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் 48 பேர் வாக்களிக்க தகுதியுள்ள நிலையில், 41 பேர் வாக்களித்தனர். முன்னாள் வீரரும், மத்தியபிரதேச கூடைப்பந்து சங்க தலைவருமான குல்விந்தர் சிங் கில் பொதுச்செயலாளராகவும், ஆந்திரா கூடைப்பந்து சங்க பொருளாளர் செங்கல்ராய நாயுடு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 7 துணைத்தலைவர்களும், 5 இணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த ஆதவ்அர்ஜுனா தேர்வு
இதில் 38 வாக்குகளை பெற்று தமிழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவராக வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு விடுதி மாணவரான தான் இன்று உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தவர், இந்தியாவில் கூடைப்பந்தாட்டத்தை மேம்படுத்தும் பெரும் பொறுப்பை பெற்றுள்ளதாக கூறினார். எனவே தனது நிர்வாக தலைமையில் கீழ் கொண்டு வந்த சீர் திருத்தங்களால் தமிழ்நாடு மாநில கூடைப்பந்து அணிகள் இந்தியாவில் முதலிடம் வகிப்பது போல், இந்திய கூடைப்பந்து அணியை உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்க இருப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படியுங்கள்