7 people arrested for playing IPL gambling

இந்தூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காவலாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின்போது அங்கு 7 பேர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.4.3 இலட்சம் ரொக்கம், 50 செல்லிடப் பேசிகள், ஒரே நேரத்தில் 16 செல்லிடப்பேசிகளை இயக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட தொலைத் தொடர்புக் கருவி, 2 மடிக் கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள உஜ்ஜைனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுடன் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.