55 players selected for the National Training Camp for Mens Hockey Team

ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு 55 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹாக்கி இந்தியா சார்பில் பெங்களூரு சாய் பயிற்சி மையத்தில் தேசிய பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உள்பட 55 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சர்தார் சிங் அணியில் இடம்பெறவில்லை. பதக்கம் எதுவும் வெல்லாமல் 4-வது இடத்தையே இந்திய ஆடவர் அணி பெற்றிருந்தது. 

இந்த நிலையில் ரமன்தீப் சிங், சுரேந்தர் குமார், பீரேந்திர லக்ரா, திப்சன் டிர்கி, நீலம் சஞ்சீவ், ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களும் தேசிய முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் மார்ஜின், "காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட தோல்வி பல்வேறு பாடங்களை கற்பித்துள்ளது. 

வருங்காலத்தில் அணியை தயார் செய்ய அவை பெரிதும் உதவும். குறிப்பிட்ட அம்சங்களில் அணியின் திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.