5 Indian boxers in the boxing championship progressed to semi-final ...
ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஐவர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில், மகளிருக்கான காலிறுதியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அனாமிகா, மங்கோலியாவின் மன்குசரன் பால்சானை வீழ்த்தினார்.
அதேபோன்று 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஆஸ்தா பவா, சீனாவின் ஜியு வாங்கை வென்றார்.
மற்றொரு பிரிவான 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் லலிதா, வியத்நாமின் தி கியாங் டிரானை வீழ்த்தினார்.
54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் திவ்யா பவார் - சீனாவின் ஜியுகிங் காவை வீழ்த்தினார்.
48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நீது கங்காஸ் - சீனாவின் ஜிஃபெய் ஹுவையும் தோற்கடித்தார்.
இதில், அனாமிகா மற்றும் ஆஸ்தா ஆகியோர், இந்த ஆண்டு ஆர்ஜென்டீனாவில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
