நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், மூன்றாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் தோனி ஆடவில்லை. தோனிக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஆடுகிறார். 

ஹர்திக் பாண்டியா சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதனால் அவருக்கு பதிலாக முதலிரண்டு போட்டிகளில் விஜய் சங்கர் ஆடினார். ஹர்திக் பாண்டியாவின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு, அவர் நியூசிலாந்து திரும்பியதால், இந்த போட்டியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா ஆடுகிறார். 

தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா என 2 மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, சாஹல்.