கேபிஐடி - எம்எஸ்எல்டிஏ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி புணேவில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதில் இரட்டையர் பிரிவில் ராம்குமாருடன் இணைந்து களமிறங்குகிறார் இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ். கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் விளையாடவுள்ளார் பயஸ். முன்னதாக 1997 டிசம்பரில் ஆமதாபாதில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் பயஸ் விளையாடினார்.
இரட்டையர் தரவரிசையில் 59-ஆவது இடத்தில் இருக்கும் பயஸ், தரவரிசையில் ஏற்றம் பெறும் வகையிலும், தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் களமிறங்குகிறார்.
இரட்டையர் பிரிவில் பயாஸுடன் இணைந்து விளையாடவுள்ள 110-ஆவது வீரர் ராம்குமார் ஆவார்.
