Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG வழுக்கி விழுந்து மணிக்கட்டில் அடி.. கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்..!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி காயத்தால் விலகியுள்ளார்.
 

zak crawley ruled out from england team for the first 2 test matches against india
Author
Chennai, First Published Feb 4, 2021, 6:03 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. அதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். நாளைய போட்டிக்காக இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் தீவிரமாக தயாராகிவந்த நிலையில், இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜாக் க்ராவ்லி காயத்தால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் ரோரி பர்ன்ஸ் ஆடாததால் 23 வயது இளம் வீரரான ஜாக் க்ராவ்லி தான் தொடக்க வீரராக இறங்கினார். இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், ஓய்வறையில் இருந்து பயிற்சிக்காக களத்திற்கு வருவதற்காக வெளியே வந்தபோது, தரை வழுக்கி கீழே விழுந்ததில் கை மணிக்கட்டில் அடிபட்டது. அதனால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஜாக் க்ராவ்லி ஆடாததால் டோமினிக் சிப்ளி மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி: 

ஜோ ரூட்(கேப்டன்), ஆர்ச்சர், மொயின் அலி, ஆண்டர்சன், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios