Asianet News TamilAsianet News Tamil

தம்பி கோலி தயவுசெய்து நீங்க சொன்ன மாதிரி செஞ்சுராதீங்க..! டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஜாகீர் கான் தேர்வு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை ஜாகீர் கான் தேர்வு செய்துள்ளார்.
 

zaheer khan picks 15 members india squad for t20 world cup
Author
Chennai, First Published Jul 31, 2021, 7:51 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை ஜாகீர் கான் தேர்வு செய்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவுடன், தானே தொடக்க வீரராக இறங்கவிருப்பதாக கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார். இந்நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆடாவிட்டால் மட்டுமே, கோலி ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும். ஆல்ரவுண்டரான பாண்டியா ஆடவில்லை என்றால், கூடுதல் பவுலர் தேவை. எனவே கூடுதல் பவுலருக்கு அணியில் இடம் கிடைக்க ஏதுவாக கோலி ஓபனிங்கில் இறங்கலாம். அப்படியில்லை, ஹர்திக் பாண்டியா ஆடுகிறார் என்றால், ரோஹித்தும் கேஎல் ராகுலுமே தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும் என்று ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்தார் ஜாகீர் கான். ரவீந்திர ஜடேஜா ஸ்பின் ஆல்ரவுண்டராக ஆடுவார். ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்த ஜாகீர் கான், ராகுல் சாஹரை அவருக்கு பேக்கப் ஆப்சனாக தேர்வு செய்துள்ளார். மேலும் வாஷிங்டன் சுந்தர் - வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் ஒருவரை கூடுதல் ஸ்பின்னராக தனது 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்துள்ளார் ஜாகீர் கான். 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, தீபக் சாஹர் ஆகிய மூவருடன், புவனேஷ்வர் குமார் - நடராஜன் ஆகிய இருவரில் ஒருவரை சேர்த்துக்கொள்ளலாம் என்றார் ஜாகீர் கான்.

டி20 உலக கோப்பைக்கான ஜாகீர் கான் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ராகுல் சாஹர், நடராஜன்/புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர்/வருண் சக்கரவர்த்தி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios