Asianet News TamilAsianet News Tamil

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: சாஸ்திரியின் கருத்தை வழிமொழியும் யுவராஜ் சிங்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாம்பியனை தீர்மானிக்க 3 இறுதி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

yuvraj singh opines 3 finals should be host to decide the icc world test champion
Author
Chennai, First Published Jun 6, 2021, 7:49 PM IST

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை தொடர்களை நடத்திவந்த ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாம்பியன்ஷிப் தொடரை நடத்திவருகிறது. கடந்த 2019 ஆஷஸ் தொடரிலிருந்து நடத்தப்பட்ட அனைத்து டெஸ்ட் தொடர்களும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது.

ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களை ஆடியது. அதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதி போட்டியில் மோதும். அந்தவகையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் சவுத்தாம்ப்டனில் வரும் 18-22ல் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன.

அந்த ஃபைனலில் வெல்லும் அணி டெஸ்ட் சாம்பியன். ஆனால் டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்க ஒரு ஃபைனல் போதாது; குறைந்தது 3 போட்டிகளையாவது நடத்தித்தான் சாம்பியனை தீர்மானிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியிருந்தார்.

அதே கருத்தைத்தான் யுவராஜ் சிங்கும் கூறியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங், இதுமாதிரியான சூழலில் 3 போட்டிகள் தேவை. முதல் போட்டியில் தோற்றால், அடுத்த 2 போட்டிகளில் மீளமுடியும். நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன், இங்கிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமையும். ஃபைனலுக்கு முன் நியூசிலாந்து ஆடும் 2 ஆட்டங்கள் அந்த அணிக்கு கூடுதல் அனுகூலமாக அமையும் என்று யுவராஜ் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios