இப்படி அழுதாரா யுவராஜ் சிங்..?! போட்டுடைத்த  மனைவி..! ரசிகர்கள் அதிர்ச்சி...! 

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டார் இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கிரிக்கெட் கிட்டை தொட்டுப் பார்த்து யுவராஜ்சிங் அழுததாக அவருடைய மனைவி ஹஷெல் கீச் தெரிவித்து உள்ளார். 

புற்றுநோய் சிகிச்சைக்கு பின் மீண்டும் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா விற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட, இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் கிட்டை தொட்டு பார்த்து, யுவராஜ் மனம் நெகிழ்ந்து அழுததாக அவருடைய மனைவி தெரிவித்து உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்த இந்த தருணத்தில் யுவராஜ் சிங் உடனான சில மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து உள்ளார் அவரது மனைவி. இது குறித்து அவர் தெரிவிக்கும் போது," நான் யுவராஜை பார்ப்பதற்கு முன் வரை கிரிக்கெட் பார்த்தது கிடையாது... அதனால் என்னால் விளையாட்டு குறித்து முழு உணர்வு  புரிந்துகொள்ள முடியவில்லை.

 2016  ஆம் ஆண்டு, சிகிச்சைக்கு பின், மீண்டும் இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் கிட்டை தொட்டு பார்த்து அழுதார். அப்போது அந்த உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.. தற்போது அவர் ஓய்வு பற்றி அறிவித்து உள்ளார். ஒரு மனைவியாக அவரது முடிவிற்கு என் முழு ஆதரவு தருகிறேன். தற்போது நடந்து வரும் உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இடம் பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். கிரிக்கெட் மீதான உணர்வு என்னை விட கிரிக்கெட் வீரர்களுக்கு தான் நன்றாக தெரியும் என அவர் தெரிவித்து உள்ளார்.

யுவராஜ் சிங்கின் ஓய்வு பற்றிய செய்திக்கு பின், கிரிக்கெட் கிட்டை தொட்டு யுவராஜ் அழுத்த விஷயம் தற்போது அவர் மனைவி மூலமாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.