இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் துர்ஹாம் மற்றும் யார்க்‌ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் துர்ஹாம் அணி யார்க்‌ஷைர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய யார்க்‌ஷைர் அணி 146 ரன்கள் அடித்தது. 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய துர்ஹாம் அணி, 19 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் யார்க்‌ஷைர் அணி வெற்றி பெற்றது. 

தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹாராஜ் யார்க்‌ஷைர் அணிக்காக ஆடிவருகிறார். இந்த போட்டியில் மஹாராஜ் வீசிய பந்தை துர்ஹாம் அணியின் பேட்ஸ்மேன் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று அடிக்காமல் விட்டார். ஆனாலும் அதற்கு துர்ஹாம் வீரர்கள் ரன் ஓடினர். அதனால் யார்க்‌ஷைர் விக்கெட் கீப்பர் ஜோனாதன் டாட்டர்சால் அந்த பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய முயன்றார். 

அந்த பந்தை எடுத்து ஸ்டம்ப் இருக்கும் திசையை பார்க்காமலேயே பந்தை வீசினார். அவர் வேகமாக வீசிய பந்து, பவுலர் மஹாராஜின் மேல் பலமாக அடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் ஓடினார். விக்கெட் கீப்பர் ஸ்டம்பை பார்க்காமலேயே பவுலர் மீது வீசிய சம்பவம், அனைவரையும் ஒரு செகண்ட் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவம் எதிர்பாராமல் நடந்தது என்பதற்காக, அடி வாங்கியவருக்கு வலி இல்லாமலா போய்விடும்..? அந்த வீடியோ இதோ..